இன்று இந்தியா கூட்டணி கட்சிகள் குடியரசு தலைவரை சந்திக்க உள்ள நிலையில் மத்திய அமைச்சர் அமித்ஷா திடீர் சந்திப்பு.!
மணிப்பூர் விவகாரம் தான் தற்போது நாட்டிற்கே தலைப்பு செய்தியாக இருக்கிறது. கடந்த 20ஆம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் மணிப்பூர் கலவரம் தொடர்பாக விவாதம் நடத்த கோரி நேற்று வரை இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுப்பட்டனர்.
ஏற்கனவே, எதிர்க்கட்சிகளின் கூட்டமைப்பான இந்தியா கூட்டணி சார்பில் அதன் முக்கிய கட்சி தலைவர்கள் மணிப்பூர் சென்ற அங்கு மக்களின் நிலை குறித்து ஆய்வு மேற்கொண்டனர். இதனை தொடர்ந்து மணிப்பூர் விவகாரம் தொடர்பாக இன்று காலை 11 மணிக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனே கார்கே தலைமையிலான இந்தியா கூட்டணி குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை சந்திக்க உள்ளனர்.
இந்நிலையில் நேற்று திடீரென மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை குடியரசு தலைவர் மாளிகையில் சந்தித்துள்ளார். இந்த தகவலைமத்திய அமைச்சர் அமித்ஷாவே தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
ஏற்கனவே, குடியரசு தலைவர் ஆட்சியை மணிப்பூரில் அமல்படுத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில், இன்றைய எதிர்க்கட்சிகள் தலைவர்களின் சந்திப்பும், நேற்றைய அமித்சா – குடியரசு தலைவர் சந்திப்பும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.