தானேவில் கிரேன் விழுந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் – மஹாராஷ்டிர முதலமைச்சர்
மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தில் சம்ருத்தி பகுதியில் விரைவுச் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வந்த நிலையில், அங்கு கிரேன் விழுந்து விபத்துக்குள்ளானது. நேற்று நள்ளிரவு பணி நடைபெற்று இருக்கும்போது 12 மணி அளவில் இந்த விபத்து
கிரேன் சரிந்து அங்கு பணியில் ஈடுப்பட்டு இருந்த தொழிலாளர்கள் மீது விழுந்த நிலையில், இந்த விபத்தில் இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளதாக தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) தெரிவித்துள்ளது. கிரேன் சரிந்து விழுந்ததில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் பிஎம் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
இந்த நிலையில், தானேவில் கிரேன் விழுந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும், விபத்து குறித்த முழுமையான அறிக்கயளிக்க உத்தரவு, மீட்புப்பணி தீவிரமாக நடந்து வருகிறது என்றும் மஹாராஷ்டிர முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார்.