அதிரடியாய் விலை குறைந்த எரிவாயு சிலிண்டர்.!
மாதந்தோறும் கேஸ் சிலிண்டர் விலையானது எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வெளியிடும். அதன்படி இன்று ஆகஸ்ட் 1ஆம் தேதியான மாதத்தின் முதல் நாளில் சிலிண்டர் விலை பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அதில் சென்னையில் வீட்டு சிலிண்டர் விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் அதே 1,118 ரூபாய் விற்பனை செய்ப்பட உள்ளது . அதே நிலையில் சென்னையில் வர்த்தக பயன்பாட்டிற்கான 19 கிலோ எடையுள்ள கேஸ் சிலிண்டர் விலையானது 92.50 ரூபாய் குறைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இன்று 1,945 ரூபாயிலிருந்து 1,852.50 ரூபாய் விலையாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த வருட தொடக்கத்தில் 1917 ரூபாயாக இருந்த வணிக விலை சிலிண்டர் மாத மாதம் ஏற்ற இறக்கம் கண்டு மார்ச் மாதம் அதிகபட்சமாக 351 ரூபாய் உயர்ந்து 2,268 ரூபாய் அதிகரித்து விற்கப்பட்டது. அதன் பிறகு படிப்படியாக குறைக்கப்பட்டு கடந்த மாதம் எட்டு ரூபாய் குறைக்கப்பட்டது. இந்த மாதம் 92 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.