மஹாராஷ்டிராவில் கிரேன் விழுந்து கோர விபத்து.. 16 பேர் உயிரிழப்பு.!
மகாராஷ்டிரா மாநிலத்தில் தானே மாவட்டத்தில் சம்ருத்தி பகுதியில் விரைவுச்சாலை அமைக்கும் மூன்றாம் கட்ட கட்டுமான பணிகள் நடைபெற்று வணடது. அங்கு, கட்டுமான பணிக்கு கிரேன் வாகனம் பயனப்டுத்தப்பட்டு வந்துள்ளது.
நேற்று நள்ளிரவு பணி நடைபெற்று இருக்கும் சமயத்தில் 12 மணி அளவில், திடீரென கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த கிரேன் சரிந்து அங்கு பணியில் ஈடுப்பட்டு இருந்த தொழிலாளர்கள் மீது விழுந்தது. இதில் வேலை பார்த்து வந்த 16 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது .
விபத்து நடந்தவுடன், உடனடியாக காவல்துறை மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மீட்புப்படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து இடிபாடுகளில் சிக்கி இருப்பவர்களை மீட்டு வருகின்றனர். 16 பேர் உயிரிழந்ததாகவும், மூன்று பேர் காயமடைந்தனர் எனவும் மேலும் 6 பேர் இடிபாடுகளில் சிக்கி இருக்கலாம் எனவும் இதுவரையில் தகவல்கள் வெளியாகியுள்ளன.