சென்னை அருகே போலீசார் நடத்திய என்கவுண்டரில் இரண்டு ரவுடிகள் உயிரிழப்பு.!
சென்னையை அடுத்த தாம்பரம் மாநகர காவல் எல்லைக்கு உட்பட்ட கூடுவாஞ்சேரி அருகே கரணை – புதுச்சேரி அருங்கல் சாலையில் காவல் ஆய்வாளர் முருகேசன் , எஸ்ஐ சிவகுருநாதன் ஆகியோர் தலைமையிலான காவலர்கள் குழு வாகன தணிக்கை சென்று கொண்டிருந்தது.
அந்த சமயம் ஒரு கார் வேகமாக சென்று காவல்துறை வாகனம் மீது மோதியது. இதில் காரின் உள்ளே இருந்த இரண்டு பேர் போலீசாரை பயங்கர ஆயுதங்களால் தாக்கியுள்ளனர். இதில் எஸ்ஐ சிவகுருநாதன் கையில் வெட்டு காயம் ஏற்பட்டது. இதனால், தற்காப்பு நடவடிக்கையாக காவல் ஆய்வாளர் முருகேசன் , எஸ்ஐ சிவகுருநாதன் ஆகியோர் அந்த இருவரையும் சுட்டனர்.
இதில் முதலில் துப்பாக்கி குண்டு பாய்ந்து சோட்டா வினோத் என்பவர் உயிரிழந்தார். இவர் மீது கொலை வழக்கு, கொலை முயற்சி என 50க்கும் மேற்பட்ட வழக்குகள் இருந்துள்ளத. அதே போல, சுடப்பட்ட இன்னொரு ரவுடி ரமேஷ் மீதும் 20க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருத்துள்ளது. இரண்டு ரவுடிகளும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்த எஸ்ஐ சிவகுருநாதன் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.