கால்வாய் சரிந்து விபத்து: 4 குழந்தைகள் உட்பட 5 பேர் பரிதாபமாக பலி!
ஒடிசாவின் ராயகடா மாவட்டத்தில் கட்டுமான பணியிடத்தில் வைக்கப்பட்டிருந்த கால்வாய் இடிந்து விழுந்ததில் விழுந்ததில் 4 குழந்தைகள் உட்பட 5 பேர் பலியாகியுள்ளனர்.
ராயகடா மாவட்டத்தின் கல்யாண்சிங்பூர் பகுதியில் உள்ள உபர்சஜா கிராமத்தில் கால்வாய்க்கு அடியில் தேங்கிய மழைநீரில் அவர்கள் குளித்துக் கொண்டிருந்த போது, இந்த சம்பவம் நடந்துள்ளது.
இந்த இடிபாடுகளில் மேலும் சிலர் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுவதால், தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீஸார் அடங்கிய மீட்புக் குழுவினர், இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், உயிரிழந்தோர் குடும்பத்துக்கு அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக், நிவாரணம் அறிவித்துள்ளார்.