யூடியூப்பில் இருந்து மாதம் ரூ.3 லட்சம் சம்பாதிக்கிறேன்..! மத்திய அமைச்சர் நிதின் கட்கரி..!
மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி, மும்பையில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றினார் அப்பொழுது எனக்கு ஒரு ரூபாய் கமிஷன் கொடுத்ததை நாட்டில் யாராவது நிரூபித்தால் அரசியல் இருந்து நான் ஒதுங்கி விடுவேன் என்று கூறினார்.
மேலும், அரசியல் என்பது பணம் சம்பாதிப்பதற்கான தொழில் அல்ல. நான் யாரிடமும் கமிஷன் வாங்க வேண்டிய அவசியம் இல்லை. ஹிந்தி, மராத்தி மற்றும் ஆங்கிலத்தில் நான் பேசுவதை யூடியூப்பில் பலர் பார்க்கின்றனர். அமெரிக்காவில் பெரும்பாலான மக்கள் எனவே பேச்சுக்களை யூட்யூப் மூலம் பார்க்கிறார்கள்.
இதனால் எனது யூடியூப் சேனலில் இருந்து மாதம் ரூ.3 லட்சம் வருமானம் பெறுகிறேன் என்றார். மேலும், சிறுவயதில் வேலை செய்ய வேண்டும் என்று விருப்பம் இல்லை என்றும் தனக்கு தான் ஒருவருக்கு கீழ் வேலை செய்யாமல் நான்கு பேருக்கு வேலை கொடுக்கும் நிலைக்கு வளர முடிவு செய்ததாகவும் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கூறியுள்ளார்.
केंद्रीय मंत्री नितिन गडकरी ने कहा
देश मे एक भी व्यक्ति कह देगा कि उन्होंने दो पैसे लिए हैं तो राजनीति से संयास ले लेंगे, यूट्यूब से प्रतिमाह 3 लाख कमाते हैं,भगवान ने बहुत बड़ी कृपा की है कि उनके समाज को आरक्षण नहीं मिला, pic.twitter.com/m2uaVyxfpp
— Yogendraindiatv (@indiatvyogendra) July 31, 2023