என்எல்சி விவகாரம் – வரும் 5-ஆம் தேதி சீமான் தலைமையில் போராட்டம் நடத்த அனுமதி மறுப்பு..!

Seeman manpr

கடந்த சில நாட்களாக கடலூரில் சேத்தியாத்தோப்பு அருகே விளைநிலங்களை அழித்து கால்வாய் வெட்டும் பணியில் என்.எல்.சி. நிர்வாகம் ஈடுபட்டுள்ள நிலையில், இயந்திரங்கள் மூலம் நிலங்கள் சமன்படுத்தும் பணி தொடங்கியுள்ளது.  மேலும்,  வளையமாதேவியில் நெற்பயிர்கள் நடவு செய்யப்பட்ட வயலில் கால்வாய் வெட்டும் பணிகள் தொடங்கிய நிலையில், விளைந்த பயிர்களை அறுவடைக்கு முன்பதாக அளிப்பதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

மேலும், என்எல்சி நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைக்கு அரசியல் தலைவர்கள் முதல் பொதுமக்கள் வரை பலரும் கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில், நெய்வேலியில் என்எல்சி நிறுவனத்திற்கு முன்பாக, பாமக சார்பில் போராட்டம் நடைபெற்ற நிலையில், அது வன்முறையாக மாறியது.

இதனை தொடர்ந்து இன்று அதிமுக எம்எல்ஏ அருண்மொழி தேவன் தலைமையில் விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தலைமையில், நெய்வேலி மந்தாரக்குப்பதில் வரும் 5-ஆம் தேதி போராட்டம் நடத்த அனுமதி கேட்டு எஸ்பி-யிடம் மனு அளிக்கப்பட்ட நிலையில், அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 19122024
arudra darisanam (1)
Congress MP Rahul Gandhi - BJP MP Pratap Chandra Sarangi
Jitin Prasada
Congress MP Rahul Gandhi - BJP MP Pratap Chandra Sarangi
suriya and bala
Congress MPs - BJP MPs Protest in Parliament