தமிழகத்தில் 3 பொருட்களுக்கு புவிசார் குறியீடு..!
ஒரு புவிசார் குறியீடானது ஒரு குறிப்பிட்ட புவியியல் இருப்பிடம் அல்லது ஒரு பகுதி, நகரம் அல்லது நாடு போன்றவற்றுடன் தொடர்புடைய சில தயாரிப்புகளுக்கு வழங்கப்படும் பெயர் அல்லது அடையாளம் ஆகும்.
இந்த நிலையில், இந்த புவிசார் குறியீடு கன்னியாகுமரி வாழைப்பழம்,ஜடேரி நாமக்கட்டி,வீரவநல்லூர் செடி புட்டா சேலை என மூன்று பொருட்களுக்கு கிடைத்துள்ளதாக அறிவு சார் சொத்துரிமை வழக்கறிஞர் சங்க தலைவர் சஞ்சய் காந்தி தெரிவித்துள்ளார்.
இதுவரை இந்தியாவில் 450 க்கும் மேற்பட்ட பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்து உள்ளது. தமிழ்நாட்டை சேர்ந்த 58 பொருட்களுக்கு இதுவரை புவிசார் குறியீடு அங்கீகாரம் கிடைத்துள்ள நிலையில், இந்தியாவிலேயே தமிழகம் முதல் இடத்தை பிடித்து உள்ளது.
இதுகுறித்து வழக்கறிஞர் சங்க தலைவர் சஞ்சய் காந்தி கூறுகையில், இந்த மூன்று பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்த நிலையில், உற்பத்தியாளர்கள் நெசவாளர்கள். விவசாயிகள் இவர்களின் வாழ்வாதாரம் உயரும். இந்தியாவிலேயே அதிகம் புவிசார் குறியீடு பெற்ற பட்டியலில் டெல்டா மாவட்டம் திகழும் என தெரிவித்துள்ளார்.