குழந்தை கடத்தலில் இந்த 3 மாநிலங்கள் தான் டாப் லிஸ்ட்.! வெளியான அதிர்ச்சி சர்வே ரிப்போர்ட்.!

Child Trafficking in India

மனிதர்கள் கடத்தலுக்கு எதிரான உலக தினம் நேற்று கடைப்பிடிக்கப்பட்ட நாளை முன்னிட்டு தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று இந்தியாவில் குழந்தை கடத்தல் பற்றியும்  குழந்தை தொழிலாளர்கள் பற்றியும் ஓர் சர்வே ரிப்போர்ட்டை எடுத்தது. அதில் பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன.

அந்த சர்வே ரிப்போர்ட்டானது, கடந்த 2016 முதல் 2022 வருட கால இடையில் இந்தியாவில் காணாமல் போன குழந்தைகள் பற்றியது. இதில் மாநில வாரியாக பார்க்கையில், அதிக குழந்தைகள் கடத்தப்பட்ட முதல் மூன்று மாநிலங்களில் உத்தரப்பிரதேசம் முதலிடம் வகிக்கிறது. அடுத்து பீகார் மற்றும் ஆந்திர பிரதேசம் ஆகிய மாநிலங்கள் உள்ளன.

அதே போல, குழந்தைகள் கடத்தலானது நகரங்கள் வாயிலாக சர்வே எடுக்கப்பட்ட போது ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் நகரம் நாட்டிலேயே முதலிடத்தில் உள்ளது. அடுத்தடுத்த இடங்களில் தலைநகர் டெல்லி நகரங்கள் உள்ளது.

2016 முதல் 2022 வரையிலான காலகட்டத்தில் 21 மாநிலங்களில் உள்ள 262 மாவட்டங்களில் பதியப்பட்ட குழந்தை கடத்தல் வழக்குகள் பதியப்பட்ட தகவல்களின் அடிப்படையில் பெறப்பட்டது. இந்த காலகட்டத்தில், கடத்தப்பட்ட குழந்தைகளில் 13,549 குழந்தைகள் மீட்கப்பட்டனர்.

மீட்கப்பட்ட குழந்தைகளில் 80 சதவீதம் பேர் 13 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும், 13 சதவீதம் பேர் ஒன்பது முதல் 12 வயது வரை உள்ளவர்கள் என்றும், 2 சதவீதம் பேர் ஒன்பது வயதுக்கு குறைவானவர்கள் என்றும் சர்வேயில்.தெரியவந்துள்ளது.

டெல்லியில் கோவிட்-க்கு முந்தைய கட்டத்தில் பதிவான கடத்தல் சம்பவங்களின் எண்ணிக்கையானது 267ஆக இருந்தது, ஆனால் கடந்த 2021-2022 காலகட்டத்தில் குழந்தை கடந்தல் வழக்குகளின் எண்ணிக்கையானது 1214 என கடுமையாக உயர்ந்துள்ளது. இதேபோல், கர்நாடகாவவிலும் குழந்தை கடத்தல் 18 மடங்கு அதிகரித்து, 6ல் இருந்து 110 சம்பவங்கள் என பதிவாகியுள்ளது.

அதே போல இந்த குழந்தைத் தொழிலாளர்கள் அதிகமாக இருக்கும் தொழில்கள் குறித்தும் இந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது. ஹோட்டல்கள் மற்றும் தாபாக்கள் அதிகபட்சமாக குழந்தைத் தொழிலாளர்கள் பணியமரத்தப்படுகின்றனர்.

அதைத் தொடர்ந்து ஆட்டோமொபைல் அல்லது போக்குவரத்துத் துறை மற்றும் ஆடைகள் துறையிலும் குழந்தை தொழிலாளர்கள் பயன்படுத்தப்படுகின்றனர் என சர்வே ரிப்போர்ட் வெளியாகியுள்ளது. அதே போல ஒப்பனை தொழிலும் குழந்தை தொழிலாளர்கள் ஈடுப்படுத்த படுகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்