ஆர்பிஎப் வீரரால் சுட்டுக்கொல்லப்பட்ட ராணுவ வீரர் – ரூ.15 லட்சம் நிதியுதவி..!

death

ஜெய்ப்பூரில் இருந்து மும்பை சென்று கொண்டிருந்த விரைவு ரயிலில் பயணித்து கொண்டிருந்த ஆர்பிஎப் கான்ஸ்டபிள் சேட்டன் குமார் , இன்று அதிகாலை 5.30 மணியளவில், பால்கர் ரயில் நிலைத்தை கடந்ததும், திடீரென தான் வைத்து இருந்த துப்பாக்கியால் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார்.

இந்த துப்பாக்கை சூட்டில், உடன் பயணித்த ASI திகா ராம்  மற்றும் 3 பயணிகள் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து பரிதாமாக உயிரிழந்தனர். துப்பாக்கி சூடு நடத்திய பின், தஹிசார் நிலையம் அருகே ரயிலில் இருந்து குதித்து தப்பிய சேத்தன் குமாரை காவல்துறையினர் கைது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், ஆர்பிஎஃப் வீரரால் சுட்டுக் கொல்லப்பட்ட ஏ எஸ் ஐ  குடும்பத்திற்கு ரூ.15 லட்சம் நிதி வழங்கப்படும் என்றும், வீரரின் இறுதி சடங்குக்கு 20 ஆயிரம் ரூபாயும், பொது காப்பீட்டு தொகையாக ரூ 65,000-ம்  வழங்கப்படும் என்று ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்