என்எல்சி 2வது சுரங்க விரிவாக்க பணி – அதிமுக எம்எல்ஏ தலைமையில் விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம் ..!

NLC Neiveli

கடந்த சில நாட்களாக கடலூரில் சேத்தியாத்தோப்பு அருகே விளைநிலங்களை அழித்து கால்வாய் வெட்டும் பணியில் என்.எல்.சி. நிர்வாகம் ஈடுபட்டுள்ள நிலையில், இயந்திரங்கள் மூலம் நிலங்கள் சமன்படுத்தும் பணி தொடங்கியுள்ளது.  மேலும்,  வளையமாதேவியில் நெற்பயிர்கள் நடவு செய்யப்பட்ட வயலில் கால்வாய் வெட்டும் பணிகள் தொடங்கிய நிலையில், விளைந்த பயிர்களை அறுவடைக்கு முன்பதாக அளிப்பதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

மேலும், என்எல்சி நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைக்கு அரசியல் தலைவர்கள் முதல் பொதுமக்கள் வரை பலரும் கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில், நெய்வேலியில் என்எல்சி நிறுவனத்திற்கு முன்பாக, பாமக சார்பில் போராட்டம் நடைபெற்ற நிலையில், அது வன்முறையாக மாறிய நிலையில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் தொண்டர்கள் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர். மேலும், சில பாமக தொண்டர்களுக்கு நீதிமன்ற காவல் அளிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து இன்று அதிமுக எம்எல்ஏ அருண்மொழி தேவன் தலைமையில் விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். என்எல்சி 2வது சுரங்க விரிவாக்க பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து வளையமாதேவி கிராமத்தில் அதிமுக எம்எல்ஏ போராட்டம் நடத்த காவல்துறை அனுமதி மறுத்தது.

காவல்துறை அனுமதி மறுத்ததை தொடர்ந்து புவனகிரி எம்எல்ஏ அலுவலகம் முன் அதிமுக எம்எல்ஏ அருண்மொழி தேவன் தலைமையில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்தில், விளைநிலங்களில் கால்வாய் வெட்டும் பணியை என்எல்சி நிர்வாகம் கைவிட வலியுறுத்தி வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்