பரபரப்பு! கட்டுப்பாட்டை இழந்த சரக்கு லாரி தாறுமாறாக ஓடி விபத்து..ஒருவர் பலி!
மதுரை வண்டியூர் பகுதி சுங்கச்சாவடியில், அரிசி ஏற்றி வந்த லாரி அடுத்தடுத்து 2 வாகனங்கள் மீது மோதி பயங்கர விபத்து ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இன்று மதியம் மதுரை வண்டியூர் பகுதி சுங்கச்சாவடியில் வழக்கம் போல பல கார்கள் பைக்குகள் சென்று கொண்டு இருந்தது. அப்போது கார் ஒன்று சென்ற பிறகு அதே சாலையில் திடீரென ஒரு சரக்கு லாரி கட்டுப்பாட்டை இழந்து மிகவும் வேகமாக வந்தது.
இதனை பார்த்த அங்கு வேலை செய்துகொண்டிருந்த சுங்கச்சாவடி ஊழியர் சதிஷ்குமார் வேகமாக லாரி நம் மீது மோதிவிடக்கூடாது என்பதற்காக மறுபக்கத்தில் தாவினார். இருப்பினும் அவர் மீது மிகவும் வேகத்தில் லாரி மோதியதால் சதிஷ் சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது தொடர்பான வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும், விபத்து நடந்ததை தொடர்ந்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டு வருகிறார்கள்.