பட்டாசு வெடிவிபத்துக்கு சிலிண்டர் கசிவு தான் காரணம்! அமைச்சர் ஆர்.சக்கரபாணி பேட்டி!

R. Sakkarapani

கிருஷ்ணகிரி மாவட்டம் பழைய பேட்டையில் உள்ள தனியார் பட்டாசு குடோனில் நேற்று வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த வெடிவிபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதற்கு பல அரசியல் தலைவர்கள் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

குறிப்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 9 பேரின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்து தலா 3 லட்சம் நிவாரணம் வழங்கி இருந்தார். இந்த நிலையில், இந்த வெடிவிபத்திற்கு காரணம் சிலிண்டர் வெடித்தது தான் காரணம் என அமைச்சர் ஆர்.சக்கரபாணி செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியுள்ளார்.

இன்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய  அமைச்சர் ஆர்.சக்கரபாணி ” கிருஷ்ணகிரி பட்டாசு குடோனில் ஏற்பட்ட வெடிவிபத்துக்கு காரணம் உணவகத்தில் உள்ள சிலிண்டர் கசிந்துள்ளது தான். இதன் காரணமாக தான் இந்த வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.

தடயவியல் துறையினர் சிலிண்டர் கசிந்ததன் காரணமாக தான் விபத்துக்கு காரணம் என அறிக்கை வழங்கி உள்ளனர். எனவே, அந்த அடிப்படையில் இந்த விபத்து ஏற்பட்டு இருந்தாலும், இந்த வெடி விபத்து எதிர்பாராத விதத்தில் நடந்த ஒரு விபத்து. மாவட்ட நிர்வாகத்திடம் “இந்த மாவட்டத்தில் எத்தனை பேர் பட்டாசு கடை லைசன்ஸ் வாங்கி வைத்திருக்கிறார்கள் என அவர்கள் அனைவரையும் அழைத்து கூட்டம் நடத்தி அவர்கள் எங்கு எல்லாம் பட்டாசு குடோன் வைத்திருக்கிறார்கள் என்பதை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க நாங்கள் சொல்லியிருக்கிறோம்.

வரும் காலத்தில் இப்படி ஒரு விபத்து நடக்காமல் இருப்பதற்கு கண்டிப்பாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்பதை நான் தெரிவித்து கொள்கிறேன்” என அமைச்சர் ஆர்.சக்கரபாணி தெரிவித்துள்ளார். மேலும், இந்த பட்டாசு விபத்தில் காயமடைந்த 9 பேருக்கு தலா 50 ஆயிரமும், தீவிர சிகிச்சையில் உள்ள 2 பேருக்கு தலா 1 லட்சமும் நிவாரணமாக ஆர்.சக்கரபாணி வழங்கினார் என்பது குறிப்பிடதக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்