மக்களவை தேர்தல் பணிகள்..! தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளுடன் மல்லிகார்ஜுன கார்கே ஆலோசனை..!

Mallikarjun kharge

தமிழக காங்கிரஸ் தலைவர்களுடன் ஆகஸ்ட் 4ம் தேதி மல்லிகார்ஜுன கார்கே ஆலோசனை நடத்தவுள்ளார்.

நாடு முழுவதும் நாடாளுமன்ற மக்களவை மற்றும் சட்டப்பேரவைகளுக்கு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படுகிறது. கடந்த 2019-ல் நடைபெற்ற மக்களவை பொதுத் தேர்தலில், வெற்றி பெற்று பாஜக ஆட்சி அமைத்தது. அந்தவகையில், மத்திய பாஜக அரசின் பதவிக் காலம் வரும் 2024 மே மாதம் முடிகிறது.

இதனால், 2024 ஏப்ரலில் பொதுத் தேர்தல் நடக்க வாய்ப்பு உள்ளது. எனவே, மக்களவை தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே இருக்கும் நிலையில், தேர்தல் பணிகள் குறித்து தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளுடன், தேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆலோசனை நடத்தவுள்ளார்.

இந்த ஆலோசனைக் கூட்டமானது ஆகஸ்ட் 4ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டம் ஆனது தமிழகத்தில் நடக்க இருப்பதாகவும், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகஸ்ட் 4 அன்று தமிழகம் வர இருப்பதாவும் கூறப்படுகிறது. இதில் நாடாளுமன்ற தேர்தல், நிர்வாகிகள் நியமனம் குறித்து ஆலோசனை நடக்க உள்ளதாக கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்