பெரும் சோகம்! பட்டாசு வெடிவிபத்தில் 9 பேர் பலி! 115 பேர் காயம்!
தாய்லாந்தின் நாராதிவாட் மாகாணத்தில் உள்ள சுங்கை கோலோக் என்ற இடத்தில் பட்டாசுக் கிடங்கில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 9 பேர் உயிரிழந்தது மட்டுமில்லாமல் கிட்டத்தட்ட 115 பேர் காயமடைந்ததாக AFP செய்தி வெளியிட்டுள்ளது.
தீ தற்போது கட்டுக்குள் உள்ளதாக நாராதிவாட் கவர்னர் தெரிவித்துள்ளார். எஃகு வெல்டிங் செயல்பாட்டின் போது ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு வெடிப்புக்கு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், இந்த வெடிவிபத்தில் 9 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்த விபத்தில் காயமடைந்த 115 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.