வெற்றிகரமாக விண்ணில் சீறிப் பாய்ந்தது பிஎஸ்எல்வி. சி-56 ராக்கெட்

ISRO PSLV-C56

சிங்கப்பூரின் DS-SAR உட்பட 7 செயற்கைக்கோள்களுடன்  பிஎஸ்எல்வி சி-56 ராக்கெட்  வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து  இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் சிங்கப்பூரின் DS-SAR செயற்கைக்கோள் ,10 கிலோவுக்கும் குறைவான எடையுள்ள மூன்று நானோ செயற்கைக்கோள்கள் உட்பட ஆறு இணை செயற்கைக்கோள்கள் இன்று (ஜூலை 30) காலை 6.30 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

360 கிலோ எடை கொண்ட DS-SAR செயற்கைக்கோள் பூமியில் இருந்து 5 டிகிரி சாய்வில் 535 கிமீ உயரத்தில் உள்ள பூமத்திய ரேகைக்கு அருகில் உள்ள சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.

DS-SAR செயற்கைக்கோள் சிங்கப்பூர் அரசின் பாதுகாப்பு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் ST இன்ஜினியரிங் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டது.

இது இஸ்ரேல் ஏரோஸ்பேஸ் இண்டஸ்ட்ரீஸ் (IAI) உருவாக்கிய SAR பேலோடைக் கொண்டுள்ளது, இது அனைத்து வானிலை பற்றிய தகவல்களை துல்லியமாக 1m-தெளிவுத்திறனில்(resolution)  படங்களை வெளியிடும் திறன் கொண்டது.

PSLV-C56  சரியான சுற்றுப்பாதையில் DS-SAR மற்றும் 6 இணை  செயற்கைக்கோள்கள் உட்பட ஏழு செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக நிலைநிறுத்தியுள்ளது ” என்று இஸ்ரோ தலைவர் எஸ் சோமநாத் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்