2வது ஒருநாள் போட்டி..! டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சுத் தேர்வு..!
இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் தொடர், 3 ஒருநாள் போட்டி மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் டெஸ்ட் தொடரில் 1-0 என இந்திய அணி வென்றுள்ளது. இதனை தொடர்ந்து, அண்மையில் முதல் ஒருநாள் போட்டி நடந்து முடிந்தது.
முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 23 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 114 ரன்கள் மட்டுமே எடுத்தது. பிறகு, 50 ஓவர்களில் 115 ரன்கள் இலக்கு என்பது எளிதாக உள்ளது என்றாலும், இந்திய அணி 5 விக்கெட் இழந்தது. முடிவில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
இந்த முதல் போட்டியானது பார்படாஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்த மைதானத்தின் தன்மை விளையாடுவதற்கு மோசமாக இருந்ததாக கேப்டன் ரோஹித் ஷர்மா விமர்சித்து இருந்தார். இந்நிலையில் இரண்டாவது ஒருநாள் போட்டி இன்றும் பார்படாஸில் உள்ள அதே கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது.
இரண்டாவது போட்டியானது 7 மணிக்குத் தொடங்கவுள்ள நிலையில் தற்பொழுது, டாஸ் போடப்பட்டுள்ளது. அதன்படி, டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
இந்தியா (பிளேயிங் லெவன்):
ஷுப்மான் கில், இஷான் கிஷன்(W), சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்டியா(C), சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், உம்ரான் மாலிக், முகேஷ் குமார்
வெஸ்ட் இண்டீஸ் (பிளேயிங் லெவன்):
பிராண்டன் கிங், கைல் மேயர்ஸ், அலிக் அதானாஸ், ஷாய் ஹோப்(w/c), ஷிம்ரோன் ஹெட்மியர், கீசி கார்டி, ரொமாரியோ ஷெப்பர்ட், யானிக் கரியா, குடாகேஷ் மோட்டி, அல்சாரி ஜோசப், ஜெய்டன் சீல்ஸ்