அடுத்த 4 நாட்களுக்கு 14 மாநிலங்களில் கனமழை..! ஆரஞ்சு அலர்ட் கொடுத்த ஐஎம்டி..!
அடுத்த 2 நாட்களுக்கு 14 மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த சில நாட்களாக இந்தியாவில் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, பஞ்சாப், ஹிமாசலப்பிரதேசம் மற்றும் டெல்லி உள்ளிட்ட வடஇந்திய மாநிலங்களில் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அடுத்த 4 நாட்களுக்கு 14 மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி, ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 2 வரை கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மழையானது அஸ்ஸாம், மேகாலயா, நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம், திரிபுரா, உத்தரபிரதேசம், அருணாச்சல பிரதேசம், மகாராஷ்டிரா, கோவா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ஒடிசா மற்றும் பீகார் என 14 மாநிலங்களில் பெய்ய வாய்ப்புள்ளது.
இதனால் இந்த 14 மாநிலங்களுக்கும் ஆரஞ்சு எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதிலும் குறிப்பாக, ஒடிசாவில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது எனவும் தெரிவித்துள்ளது.
⚠️ #OrangeAlert ⚠️
On 29th July to 2nd August, #Odisha is expected to experience Heavy to Very heavy rainfall (115.6 to 204.4 mm). Stay safe!#WeatherWarning #HeavyRainfall #Monsoon2023 #RainySeason@moesgoi @DDNewslive @ndmaindia@airnewsalerts pic.twitter.com/N1aUFhyaWv
— India Meteorological Department (@Indiametdept) July 29, 2023