எதிர்காலத்தின் தலைமைக்கான வாய்ப்பு உதயநிதி ஸ்டாலினுக்கு உள்ளது.! திமுக எம்பி ஆ.ராசா பேச்சு.!
எதிர்காலத்தின் தலைமைக்கான வாய்ப்பு உதயநிதி ஸ்டாலினுக்கு உள்ளது என திமுக எம்பி ஆ.ராசா திமுக கூட்டத்தில் பேசியுள்ளார்.
இன்று திமுக இளைஞரணி நிர்வாகிகள் அறிமுக கூட்டணி இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில், முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திமுக எம்பிக்கள் ஆ.ராசா , டி.ஆர்.பாலு , திமுக நிர்வாகிகள் என பலர் கலந்துகொண்டனர்.
அதில் பேசிய திமுக எம்பி ஆ.ராசா, நான் 32 வயதில் எம்பி ஆனேன். அடுத்து மத்திய மந்திரி, அடுத்து, கேபினெட் அமைச்சர், அடுத்து மாவட்ட செயலாளர், அடுத்து கேபினெட் அமைச்சர் என பொறுப்பு வகித்தேன். அதற்கு கலைஞருக்கு நன்றி. அதற்கு எப்போதும் நன்றியுள்ளவனாக இருப்பேன்.
அண்ணாவுக்கு பிறகு படித்தவர்கள் நிறைய தலைவர்கள் இருந்தார்கள். ஆனால் மக்கள் கலைஞரை தான் ஏற்றார்கள். அதற்கு பிறகு மு.க.ஸ்டாலினை ஏற்றுள்ளனர். இந்த மக்கள் ஏற்பு, அடுத்த தலைமை ஏற்கும் பண்பு தம்பி உதயநிதி ஸ்டாலின் அவர்களிடம் உள்ளது என திமுக எம்பி ஆ.ராசா கட்சி கூட்டத்தில் பேசியுள்ளார்.