சென்னையில் தனியார் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து..!
சென்னை அம்பத்தூரில் தனியார் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ள நிலையில், தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை அம்பத்தூரில் தனியார் தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது. இங்கு திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இரும்பு தாதுகளை உருக்க பயன்படுத்தப்படும் ராட்சத கேஸ் சிலிண்டர் அறையில் தீ பரவியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறை அதிகாரிகள் அத்தீயை அணைக்கும் பணியில், தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.