உங்கள் மகன் எத்தனை மேட்ச் விளையாடி BCCI தலைவரானார்.? அமித்ஷாவுக்கு அமைச்சர் உதயநிதி கேள்வி.!
நேற்று மத்திய அமைச்சர் அமித்ஷா ராமேஸ்வரத்தில் பேசுகையில், சோனியா காந்திக்கு ராகுல் காந்தி பிரதராக வேண்டும் என்று ஆசை, முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உதயநிதி ஸ்டாலின் முதல்வராக வேண்டும் என்று ஆசை என விமர்சனம் செய்து இருந்தார்.
அதற்கு பதில் அளிக்கும் விதமாக இன்று திமுக இளைஞரணி நிர்வாகிகள் அறிமுக கூட்டத்தில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நான் மக்களை நேரில் சந்தித்து தேர்தலில் போட்டியிட்டு அதில் வென்று அமைச்சரானேன். உங்கள் மகன் ஜெய்ஷா எப்படி இந்திய கிரிக்கெட் வாரியம் BCCIக்கு தலைவரானார்.? எத்தனை கிரிக்கெட் போட்டி விளையாடி, எத்தனை ரன்கள் எடுத்தார் என கேள்வி எழுப்பியுள்ளார்.