நமது கல்வி முறை, இந்திய பாரம்பரியங்களை பாதுகாப்பதோடு அறிவியலிலும் முன்னேறி வருகிறது; பிரதமர் மோடி பெருமிதம்.!

PMModi akilshiksha

இந்தியாவின் பாரம்பரியம் மற்றும் நவீன அறிவியல் இரண்டையும் நமது கல்விமுறை பாதுகாப்பதோடு வளர்த்தும் வருகிறது என பிரதமர் பேச்சு.

இன்று பாரத் மண்டபத்தில் அகில இந்திய கல்வி மாநாடு மற்றும், அகில் பாரத சிக்ஷா சமகம் இரண்டையும் பிரதமர் மோடி, மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதானுடன் தொடங்கிவைத்தார். தேசிய கல்விக்கொள்கையை அறிமுகப்படுத்தி 3 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி இன்று பிரதமர் மோடி இந்த நிகழ்வுகளை துவக்கிவைத்தார்.

அதன்பிறகு திறப்பு விழாவில் பேசிய பிரதமர் மோடி, நமது கல்வி முறை குறித்து நாம் எவ்வளவு தூரம் வளர்ச்சி அடைந்துள்ளோம் என்பதை பெருமையுடன் கூறினார். காசியின் ருத்திராக்ஷம் தொடங்கி, நவீன இந்தியாவின் பாரத மண்டபம் வரை அகில் பாரத சிக்ஷா சமகம் பாரம்பரியம் மற்றும் நவீனம் இரண்டையும் உள்ளடக்கியுள்ளது.

மேலும் கூறிய பிரதமர் மோடி, நமது பாரம்பரியத்தையும் பாதுகாப்பதோடு, இந்தியாவின் அறிவியல் வளர்ச்சியிலும், தொழில்நுட்பத்திலும் நாடு முன்னேற்றமைடைந்து வருவதற்கும் நமது கல்விமுறை பாதைகளை வகுக்கிறது என பிரதமர் மோடி தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்