குடிப்பழக்கம் மட்டும் என்னிடம் இல்லனா..,மதுபிரியர்களுக்கு அட்வைஸ் கொடுத்த சூப்பர் ஸ்டார்!

JailerAudioLaunch

குடிப்பழக்கம் மட்டும் என்னிடம் இல்லாமல் இருந்திருந்தால் இப்போது இருப்பதை விட எங்கோ இருந்திருப்பேன் என நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் பட ஆடியோ வெளியீட்டு விழாவில் கூறியுள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் இந்த ஆண்டு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் ஜெயிலர். இந்த திரைப்படம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இன்னும் 12 நாட்களே உள்ள நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று இரவு நடந்தது.

JailerAudioLaunch
JailerAudioLaunch [Imagesource : @RIAZtheboss]

இந்த பிரமாண்டமான நிகழ்ச்சியில் ரஜினிகாந்த், தமன்னா பாட்டியா, டைகர் ஷெராப், ஷிவா ராஜ்குமார், அனிருத் ரவிச்சந்தர் மற்றும் நெல்சன் திலீப்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், இந்த இசை வெளியீட்டு விழா மேடையில் ஏறக்குறைய ஒரு மணி நேரம் பேசிய ரஜினிகாந்த், நிறைய சுவாரசியமான தகவலை பகிர்ந்து கொண்டார்.

மேலும் அவர் பேசுகையில், “குடிப்பழக்கம் எனக்கு நானே வைத்துக் கொண்ட சூனியம், தயவு செய்து குடிப்பதை விட்டுவிடுங்கள். குடிப்பதால் அம்மா, மனைவி உட்பட குடும்பத்தில் இருக்கும் அனைவரது வாழ்க்கையும் பாதிக்கப்படுகிறது. ஏதாவது, கொண்டாட்டத்தின் போது சிறிய அளவில் எடுத்துக்கொண்டால் தவறல்ல.

ஆனால் அளவில்லாமல் குடித்தால் அது நம்மையும் நம்பை சுற்றியுள்ளவரையும் பாதிக்கும். குடிப்பழக்கம் மட்டும் என்னிடம் இல்லாமல் இருந்திருந்தால் இப்போது இருப்பதை விட எங்கோ இருந்திருப்பேன்” என அட்வைஸ் கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்