ராமேஸ்வரம் கோவிலில் தரிசனம் செய்தது எனது பெரும் பாக்கியம்.! தமிழில் டிவீட் செய்த அமித்ஷா.!
தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் பாதயாத்திரை துவக்க விழாவில் கலந்து கொள்ள நேற்று ராமேஸ்வரம் வந்த மத்திய அமைச்சர் அமித்ஷா, இன்று ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் தரிசனம் செய்தார்.
இந்த தரிசனம் குறித்து மத்திய அமைச்சர் அமித்ஷா தனது டிவிட்டர் பக்கத்தில், ராமேஸ்வரம் கோவிலில் ஆரத்தி மற்றும் அபிஷேகம் செய்ததை பெரும் பாக்கியமாக கருதுகிறேன். 12 ஜோதிர்லிங்கங்களில் ஒன்றான பிரபு ஸ்ரீ ராம் பகவான், சிவனை வழிபட்ட இடம் இது. இந்த ஆலயம் சனாதன தர்மத்தின் தொன்மை மற்றும் மகத்துவத்தின் வெளிப்பாடாகும். நாட்டு மக்களின் நல்வாழ்வுக்காகவும், நமது தேசத்தின் செழிப்பிற்காகவும் பிரார்த்தனை செய்தேன் என தமிழில் டிவீட் செய்து இருந்தார்.
ராமேஸ்வரம் கோவிலில் ஆரத்தி மற்றும் அபிஷேகம் செய்ததை பெரும் பாக்கியமாக கருதுகிறேன். 12 ஜோதிர்லிங்கங்களில் ஒன்றான பிரபு ஸ்ரீ ராம் பகவான், சிவனை வழிபட்ட இடம் இது. இந்த ஆலயம் சனாதன தர்மத்தின் தொன்மை மற்றும் மகத்துவத்தின் வெளிப்பாடாகும். நாட்டு மக்களின் நல்வாழ்வுக்காகவும், நமது… pic.twitter.com/rmw3H3Rzch
— Amit Shah (@AmitShah) July 29, 2023