BREAKING: துப்பாக்கி சுடும் 10 மீ ஏர் ரைஃபிலில் இளவேனில் வலறிவன் தங்கம் வென்று அசத்தல்.!
மகளிருக்கான ஏர் ரைஃபில் 10 மீ போட்டியில் தமிழகத்தின் இளவேனில் வலறிவன் தங்கம் வென்று அசத்தியுள்ளார்.
உலக பல்கலைக்கழகங்களுக்கு இடையே நடந்த விளையாட்டு போட்டிகளில், தமிழகத்தை சேர்ந்த இளவேனில் வலறிவன், துப்பாக்கி சுடும் 10 மீ ஏர் ரைஃபிலில் 252.5 புள்ளிகள் பெற்று தங்கம் வென்றுள்ளார். இவர் இந்தியாவுக்காக பலமுறை தங்கம், வெள்ளி உள்ளிட்ட பதக்கங்கள் வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதே போல் கடந்த 2019யிலும் நடந்த விளையாட்டு போட்டிகளில் இவர் வெள்ளிப்பதக்கம் வென்றிருந்தார்.