கிருஷ்ணகிரி பட்டாசு கிடங்கு வெடிவிபத்து..! பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு..!

CrackerGoodownFire

கிருஷ்ணகிரி பட்டாசு கிடங்கு வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் பழைய பேட்டையில் உள்ள தனியார் பட்டாசு குடோனில் இன்று காலை வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த வெடி விபத்தில் இதுவரை 4 பேர் உயிரிழந்திருந்த நிலையில், பலி எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இதன்பின், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பட்டாசுகள் வெடித்து சிதறியதில் குடோன் உட்பட மூன்றுக்கும் மேற்பட்ட வீடுகள் முற்றிலும் சேதமடைந்துள்ளன.

மேலும், விபத்தில் காயமடைந்தவர்கள் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து ஏற்பட்ட பகுதியில் இருக்கும் உணவகம் சேதமடைந்துள்ளதாவும், அதில் சிலர் சிக்கியிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

எனவே, சேதமடைந்த கட்டிடங்களை ஜேசிபி மூலம் அப்புறப்படுத்தும் பணியும், சிக்கியவர்களை மீட்கும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் சரயு மற்றும் காவல் கண்காணிப்பாளர் சரோஜ் குமார் நேரில் சென்று ஆய்வு நடத்தி வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்