மஹாராஷ்டிராவில் சோகம்! இரண்டு பேருந்துகள் நேருக்குநேர் மோதி விபத்து… 6 பேர் பலி.!
மகாராஷ்டிர மாநிலம் புல்தானா மாவட்டத்தில், இரு பேருந்துகள் நேருக்குநேர் மோதியதில் சம்பவ இடத்திலேயே 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
இன்று அதிகாலை மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள புல்தானா மாவட்டத்தில் இரண்டு தனியார் பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளானதில், பெண்கள் உட்பட 6 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 21 பேர் பேருந்து நசுங்கியதில் பலத்த காயமடைந்துள்ளனர்.
ஏற்கனவே இம்மாத தொடக்கத்தில், இதே மாவட்டத்தில் பேருந்து தீப்பிடித்ததில் 25 பேர் உடல் கருகி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.