மீண்டும் அதே மைதானம்.. வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் களமிறங்கும் இந்திய அணி.!
வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக முதல் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது ஒருநாள் போட்டியில் களம் காணும் இந்தியா.
இந்திய கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடர், ஒருநாள் போட்டி டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் டெஸ்ட் தொடர் 1-0 என இந்திய அணி வென்றுள்ளது. இதனை தொடர்ந்து, அண்மையில் முதல் ஒருநாள் போட்டி நடந்து முடிந்தது.
முதல் போட்டியில் இலக்கு 50 ஓவர்களில் 115 ரன்கள் எனும் குறைவானது தான் என்றாலும், இந்திய அணி 5 விக்கெட் இழந்து, 5 விக்கெட் வித்தியாசத்தில் தான் வென்றது. முதல் போட்டியானது பார்படாஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்த மைதானத்தின் தன்மை விளையாடுவதற்கு மோசமாக இருந்ததாக கேப்டன் ரோஹித் ஷர்மா விமர்சித்து இருந்தார்.
இந்நிலையில் இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று அதே பார்படாஸ் மைதானத்தில்நடைபெற உள்ளது. அணியல் எந்த வித மாற்றமும் இன்றி களமிறங்கும் என்று தான் எதிர்பார்க்கப்படுகிறது.