சென்னை : ஆம்னி பேருந்து – லாரி மோதி விபத்து.! இரு வாகனங்களுக்கும் தீ பரவியதால் பரபரப்பு.!
சென்னை – பெங்களூரு நெடுஞ்சாலையில் ஆம்னி பேருந்து – லாரி மோதி விபத்து ஏற்பட்டதில் இரு வாகனங்களிலும் தீ பற்றியது.
பெங்களூரில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த கர்நாடகா அரசு ஏசி ஆம்னி பேருந்து, சென்னை – பெங்களூரு நெடுஞ்சாலையில் வேலப்பன்சாவடி அருகே வந்து கொண்டிருக்கும்போது அங்கிருந்த லாரியின் பின்பக்கம் மோதியதில் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இரண்டு வாகனங்களிலும் உடனடியாக தீப்பற்றியது.
இந்த ஆம்னி பேருந்தில் 22 பயணிகள் பயணித்து வந்துள்ளனர். நல்லவேளையாக பேருந்தில் இருந்த அவசர வழி வழியாக 22 பயணிகளும் உடனடியாக வெளியேறினார். இதனால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.
அருகில் இருதந்தவர்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்த உடன், பூவிருந்தவல்லி, மதுரவாயல் பகுதி தீயணைப்பு துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அதிகாலை நேரம் சென்னை நெடுஞ்சாலை பக்கத்தில் விபத்து ஏற்பட்டதால் அங்கு பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனை சரி செய்யும் முயற்சியில் போக்குவரத்து காவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.