சிங்கப்பூரில் கடந்த 20 ஆண்டுகளில் முதல் முறையாக தூக்கிலிடப்பட்ட பெண்..!
சிங்கப்பூரில் கடந்த 20 ஆண்டுகளில் முதல் முறையாக பெண் ஒருவர் தூக்கிலிடப்பட்டுள்ளார்.
போதைப்பொருள் கடத்தல் குற்றத்திற்காக 45 வயது பெண்ணான சரிதேவி பிண்டே ஜமானி தூக்கிலிடப்பட்டுள்ளதாக மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
30.72 கிராம் ஹெராயின் வைத்திருந்ததாக கைது செய்யப்பட்ட அவருக்கு, நாட்டின் போதைப்பொருள் சட்டத்தின் கீழ் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த மரணதண்டனை விதிக்கப்பட்டு தூக்கிலிடப்பட்டுள்ள பெண், சிங்கப்பூரில் ஏறக்குறைய 20 ஆண்டுகளில் முதல் முறையாக தூக்கிலிடப்பட்டுள்ள பெண் ஆவார்.