அண்ணாமலை பாதயாத்திரை – விஜயகாந்த் ஆதரவு..!
அண்ணாமலையின் பாதயாத்திரைக்கு விஜயகாந்த் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆதரவு கோரினார்
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள், ‘என் மண், என் மக்கள்’ என்ற பாதயாத்திரையை ராமேஸ்வரத்தில் இருந்து இன்று தொடங்குகிறார். தமிழகம் முழுவதும் 6 மாதங்கள் பாதயாத்திரை மேற்கொள்ளும் அண்ணாமலை, 225 ஊர்களில் மக்களை சந்திக்கிறார்.
இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன், இந்த பாதயாத்திரையில் கலந்துகொள்ள தேமுதிகவுக்கு அழைப்பு விடுத்து இருந்தனர். இதனையடுத்து, அண்ணாமலை பாதயாத்திரைக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு விஜயகாந்த் ஆதரவு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ராமேஸ்வரத்தில் இருந்து இன்று நடைபயணம் தொடங்குகிறார். அவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆதரவு கோரினார். மாநில துணை செயலாளர் திரு.கரு. நாகராஜன் நேரடியாக வந்து அழைப்பிதழை வழங்கினார்.
மரியாதை நிமித்தமாக தேமுதிக சார்பில், ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் திரு. சிங்கை ஜின்னா மற்றும் கழகத்தினர், இந்த நடைபயண துவக்க விழாவில் கலந்து கொள்கிறார்கள். அவரது நடைபயணம் வெற்றி பெற எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.’ என பதிவிட்டுள்ளார்.
மரியாதை நிமித்தமாக தேமுதிக சார்பில், ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் திரு. சிங்கை ஜின்னா மற்றும் கழகத்தினர், இந்த நடைபயண துவக்க விழாவில் கலந்து கொள்கிறார்கள்.
அவரது நடைபயணம் வெற்றி பெற எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.(2-2) pic.twitter.com/6QLaCamLqz— Vijayakant (@iVijayakant) July 28, 2023