சென்னையில் ஜி20 மாநாடு.! பிரதமர் மோடி காணொளி வாயிலாக உரை.!

PM Modi

ஜி-20 சுற்றுசூழல் மற்றும் பருவநிலை மாற்றம் தொடர்பான கூட்டத்தில் பிரதமர் மோடி காணொளி வாயிலாக உரை. 

சென்னையில் மாமல்லபுரத்தில் ஜி-20 நாடுகளின் சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை குறித்த அமைச்சர்கள் மாநாடு நடைபெற்று வருகிறது. டெல்லியில் இருந்து காணொலி வாயிலாக பங்கேற்று பேசிய பிரதமர் மோடி, யுனெஸ்கோவால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்ட மாமல்லபுரத்தின் அனுபவத்தை உங்களால் பெற முடியம். நெடுங்கடலும் தண்ணீரும்.. என்ற குரலை 2000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த புனித துறவியான திருவள்ளுவர் கூறியுள்ளார்.

இந்தியாவில், இயற்கையும் அதன் அடிப்படையில் வழக்கமான கற்றலுக்கான ஆதாரமாக திகழ்கிறது. பருவநிலை மாற்றம், சுற்றுச்சூழல் பிரச்சினைகளால் தெற்குலக நாடுகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பூமித்தாயை பாதுகாப்பது, பராமரிப்பது என்பது நமது அடிப்படை கடமை.

இயற்கை நமக்கு வழங்குவதைப் போல நாமும் இயற்கைக்கு வழங்க வேண்டும். பிளாஸ்டிக் மாசுவை முடிவுக்கு கொண்டு வர ஜி20 நாடுகள் ஆக்கப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சர்வதேச அளவில் சட்டப்பூர்வ கட்டமைப்பை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இன்று, நிறுவப்பட்ட புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திறன் அடிப்படையில் உலகின் முதல் 5 நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும்.

2070-ஆம் ஆண்டிற்குள் நிகர பூஜ்ஜியத்தை அடைவதற்கான இலக்கையும் நாங்கள் நிர்ணயித்துள்ளோம். சர்வதேச சோலார் கூட்டணி, CDRI மற்றும் தொழில் மாற்றத்திற்கான ஒத்துழைப்பை நாங்கள் தொடர்ந்து வழங்கி வருகிறோம். பல்லுயிர் பாதுகாப்பு, பாதுகாப்பு மற்றும் செறிவூட்டல் ஆகியவற்றில் நடவடிக்கை எடுப்பதில் இந்தியா தொடர்ந்து முன்னணியில் உள்ளது என பிரதமர் தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்