நைஜரில் ராணுவ ஆட்சி.! காவல்துறை கட்டுப்பாட்டில் அந்நாட்டு அதிபர்.! மக்கள் போராட்டம்..

Niger Army

அதிபர் கைது செய்யப்பட்டு நைஜரில் ராணுவ ஆட்சி நடைபெறுகிறது. இதனை எதிர்த்து மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜரில் அதிபர் முகமது பாகம் தலைமையில் ஆட்சி நடைபெற்று வந்தது. இந்த ஆட்சியின் கீழ் செயல்பட்டு வந்த ராணுவம் திடீரென அரசாங்கத்திற்கு எதிராக திரும்பி அதிபர் முகமது பாகமை சிறை பிடித்து காவல்துறை கட்டுப்பாட்டில் வைத்தனர்.

அதிபர் கைதை அடுத்து, அந்நாட்டு ராணுவ உயர் அதிகாரிகள், அதிபர் பதவியில் இருந்து முகமது பாகம் அகற்றப்பட்டு உள்ளார். எனவே தற்போது நைஜரில் ராணுவ ஆட்சி நடைபெறுகிறது என அறிவித்தனர். இது உள்நாட்டு விவகாரம் எனவும் யாரும் தலையிட வேண்டாம் என்றும் ராணுவ அதிகாரிகள் கூறினார்.

ராணுவ ஆட்சி நடைபெறுவதால், பிற நாட்டு போக்குவரத்தை தவிர்க்க, அங்கு அந்நாட்டு தரைவழி எல்லைகள் முற்றிலுமாக மூடப்பட்டுள்ளது. மேலும், இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ராணுவத்தின் இந்த நடவடிக்கையை எதிர்த்து அந்நாட்டு மக்கள் கடுமையான போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்தை ராணுவம் துப்பாக்கி சூடு நடத்தி கலக்க  முற்பட்டு வருகிறது. இதனால் நைஜர் நாடு முழுவதும் பதற்றமான சூழல் நிலவுகிறது.

நைஜர் நாட்டு ராணுவத்தின் இந்த செயலுக்கு ஐநா கடும் கண்டனத்தை பதிவு செய்து உள்ளது. ஜனநாயகத்திற்கு எதிராக நைஜர் ராணுவத்தினர் செயல்பட்டு வருகின்றனர் எனவும், அதனை நிறுத்த வேண்டும் என்றும், அதிபர் முகமது பாகமை விடுதலை செய்ய வேண்டும் எனவும் ஐநா தனது கண்டனத்தில் குறிப்பிட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்