பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பாத யாத்திரை… துவங்கி வைக்க வருகை தரும் மத்திய அமைச்சர் அமித்ஷா.!
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பாத யாத்திரை நிகழ்வை துவங்கி வைக்க மத்திய அமைச்சர் அமித்ஷா ராமேஸ்வரம் வருகிறார்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று தமிழக முழுவதும் பாதயாத்திரை மேற்கொள்ள துவங்குகிறார். என் மண் என் மக்கள் என்ற தலைப்பில் வரும் நாடாளுமன்ற தேர்தல் குறித்த பிரச்சார பாதயாத்திரையாக இன்று ராமேஸ்வரத்தில் இருந்து தனது பாதயாத்திரையை அண்ணாமலை துவங்குகிறார். இந்த பாதயாத்திறையை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா துவங்கி வைக்க உள்ளார்.
இதற்காக மத்திய அமைச்சர் அமித்ஷா டெல்லியில் இருந்து இன்று மதியம் 1 மணி அளவில் மதுரை விமான நிலையத்திற்கு வருகிறார். அங்கிருந்து ராமேஸ்வரம் செல்கிறார். மாலை 5 மணி அளவில் ராமேஸ்வரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாதயாத்திரை துவக்க விழாவுக்கான நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா. இதன்பிறகு அண்ணாமலையின் பாதயாத்திரியை துவங்கி வைக்கிறார்.
இந்த யாத்திரைக்கு கூட்டணி கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இதில் அதிமுக சார்பில் எடப்பாடி பழனிச்சாமிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்த நிலையில், அதிமுக சார்பாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இந்த நிகழ்வில் கலந்து கொள்வார் என கூறப்பட்டுள்ளது.