அனைவரும் தமிழில் கையொப்பமிட வேண்டும்… பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவு.!

TN Secretary office go

பள்ளிக்கல்வித்துறை அலுவலகங்களில் பணிபுரியும் அனைவரும் தமிழில் கையொப்பமிட வேண்டும் என உத்தரவு.

தமிழக அரசின் 2021 ஆம் ஆண்டு வெளியிட்ட அரசாணையைக் குறிப்பிட்டு, பள்ளிக்கல்வி இயக்குநர், அறிக்கை வெளியிட்டுள்ளார், அதன்படி பள்ளிக்கல்வித்துறை அரசு அலுவலக பணியாளர்கள் அனைவரும் தமிழில் கையொப்பமிடவேண்டும் எனவும் வருகைப்பதிவு, ஆவணங்களிலும் தமிழில் கையொப்பமிடவும், மற்றும் மாணவர்களையும் தமிழில் கையொப்பமிட அறிவுறுத்தவும் வலியுறுத்தி வெளியிடப்பட்டுள்ளது.

tamilsignature
tamilsignature [Image – representative]

பள்ளிக்கல்வித்துறை அனைத்து பேராசிரியர்கள், இயக்குநர்கள், கல்வி அலுவலர்கள் என அனைவருக்கும் இந்த அரசின் 2021 ஆம் ஆண்டு அறிக்கையை மேற்கோள்காட்டி பள்ளிக்கல்வி இயக்குநர் அறிக்கை மூலம் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் அரசின் டி.பி.ஐ வளாகம் தொடங்கி கடைநிலை அலுவலகம் வரை அரசு அலுவலகங்களில் பணிபுரியும் அலுவலர்கள் அனைவரும் அனைத்து இடங்களிலும் தங்கள் பெயரைக் குறிப்பிடும்போதும், கையொப்பம் இடும்போதும் தமிழிலேயே எழுதவேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்