நைஜர் அதிபரை உடனடியாக விடுவிக்க வேண்டும்-அமெரிக்கா வலியுறுத்தல்.!
நைஜரின் அதிபர் மொஹம்மது பாஸூமை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என அமெரிக்கா கூறியுள்ளது.
நைஜரில் இராணுவப் படையினர் அதிபர் மொஹம்மது பாஸூமை அவரது ஜனாதிபதி மாளிகையில் பிணைக் கைதியாகப் பிடித்து வைத்து, அதிகாரத்தைக் கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது.
நைஜரில் தற்போது ஏற்பட்டுள்ள இந்த நிலைமைக்கு வருத்தம் தெரிவித்துள்ள அமெரிக்கா, ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபரை நாங்கள் ஆதரிக்கிறோம். வலுக்கட்டாயமாக ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி அரசியலமைப்புச் சட்டத்தை சீர்குலைக்கும் எந்தவொரு முயற்சியையும் வன்மையாக கண்டிக்கிறோம்.
மேலும் அதிபர் மொஹம்மது பாஸூமை உடனடியாக விடுவிக்கவும், சட்டத்தின் ஆட்சி மற்றும் பொது பாதுகாப்புக்கு மதிப்பளிக்கவும் வேண்டும் எனவும் என்று அமெரிக்காவுக்கான வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர் தெரிவித்தார்.