மணிப்பூர் வன்முறை; I.N.D.I.A கூட்டணி எம்.பிக்கள் இன்று கருப்பு உடையுடன் பங்கேற்பு.!
மணிப்பூர் வன்முறை தொடர்பாக நாடாளுமன்ற கூட்டத்தொடரில், இன்று எதிர்கட்சிக் கூட்டணி எம்.பிக்கள் கருப்பு உடை அணிந்து பங்கேற்க முடிவு.
கடந்த வாரம் தொடங்கிய நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடரில், மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி, விளக்கம் அளிக்கவேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து முழக்கமிட்டனர்.
தற்போது வரை பிரதமர் விளக்கம் அளிக்காததால் இதனை கண்டித்து இன்று I.N.D.I.A கூட்டணி எம்.பிக்கள் கருப்பு உடை அணிந்து பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.