எதிர்க்கட்சிகள் மீண்டும் அமளி – மக்களவை 2 மணி வரை ஒத்திவைப்பு..!
எதிர்க்கட்சியினர் மீண்டும் அமளியில் ஈடுபட்ட நிலையில், மக்களவை மதியம் 2 மணிவரை ஒத்திவைப்பு.
கடந்த 20- ஆம் தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது. இந்த நிலையில், கடந்த 4 நாட்கள் நடைபெற்ற கூட்ட தொடரில், மக்களவை, மாநிலங்களவையில் மணிப்பூர் சம்பவம் குறித்து எதிர்க்கட்சிகளின் அமளியில் ஈடுபட்ட நிலையில் இரு அவைகளும் முடங்கியது.
இந்த நிலையில், இன்று தொடங்கிய நாடாளுமன்ற கூட்டத்தொடரில், கார்கில் போர் வெற்றி தினத்தையொட்டி, உயிரிழந்த ராணுவ வீர்ரகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து, 5-வைத்து நாளான இன்றும் மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி விளக்கமளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்ட நிலையில், மக்களவை மதியம் 12 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
அதன்பின் மதியம் 12 மணிக்கு மீண்டும் கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், பாஜக அரசுக்கு எதிராக தீர்மானம் ஏற்கப்பட்ட நிலையில், எதிர்க்கட்சியினர் மீண்டும் அமளியில் ஈடுபட்டனர். இதனையடுத்து, மக்களவை மதியம் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.