கார்கே பேசும்போது மைக் அணைக்கப்பட்ட விவகாரம் – திருச்சி சிவா கண்டனம்!

Tiruchi Siva

எதிர்க்கட்சி தலைவர் கார்கே பேசும்போது மைக் அணைக்கப்பட்டதற்கு திமுக எம்.பி. திருச்சி சிவா கண்டனம்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்து மணிப்பூர்  பிரதமர் மோடி பேச வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர் அமளியால் இரு அவைகளிலும் முடங்கி வருகிறது. இன்று 5-ஆவது நாளாக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசுக்கு எதிராக 2 நம்பிக்கையில்லா தீர்மானங்கள் தாக்கல் செய்யப்பட்டது.

இதுதொடர்பாக விவாதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், மாநிலங்களவையில் நேற்று எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசும்பொழுது அவரது மைக் அணைக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த செயல் எனது சுயமரியாதைக்கு விடப்பட்ட சவாலாகவே பார்க்கிறேன் என இன்று மாநிலங்களவையில் கார்கே கண்டனம் தெரிவித்தார்.

இதுபோன்று, கார்கே பேசும்போது மைக் அணைக்கப்பட்டதற்கு திமுக எம்.பி. திருச்சி சிவா கண்டனம் தெரிவித்தார். இதுதொடர்பாக பேசிய அவர், மணிப்பூர் கலவரம் கொடூரம் குறித்து, நேற்று மாநிலங்களவையில் எதிர்க்கட்சி தலைவர் கார்கே பேசும்போது பைக் அணைக்கப்பட்டது. மைக் அணைப்பது போன்ற நடவடிக்கை மாநிலங்களவையில் எப்போதும் நடந்ததில்லை. ஏன் பைக் அணைக்கப்பட்டது?, யார் உத்தரவின் பேரில் இது நடந்தது? என சரமாரி கேள்வி எழுப்பியுள்ளார்.

எதிர்க்கட்சி எம்பிக்கள் பேசும்போது மைக் அணைக்கப்படுவதாகவும், திமுக எம்பி திருச்சி சிவா குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். யாருடைய மைக்கும் அணைக்கப்படவில்லை என மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர் விளக்கம் அளித்த நிலையில், மணிப்பூர் வீடியோ விவகாரம் குறித்து விவாதிக்க, மாநிலங்களவையில் அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்