2 நாள் பயணமாக இன்று திருச்சி செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!
இரண்டு நாள் பயணமாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருச்சி செல்கிறார். இன்னும் சற்று நேரத்தில் விமானம் மூலம் திருச்சி செல்லும் அவர், திமுக ஓட்டுச்சாவடி முகவர் கூட்டத்தில் பங்கேற்கிறார்.
பின்னர், இரவு ஓய்வுக்கு பின் நாளை வேளாண் கண்காட்சியை தொடங்கி வைக்கிறார். அதன்பின் தஞ்சாவூரில் திருமண நிகழ்வில் பங்கேற்றுவிட்டு நாளை இரவு திருச்சியிலிருந்து விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்.