கடலூர், வளையமாதேவியில் நிலத்தை சமன்படுத்தும் பணியில் என்எல்சி நிர்வாகம் – பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

strike

கடலூர் மாவட்டத்தில் என்.எல்.சி. நிலக்கரி சுரங்கம் விரிவாக்கத்திற்காக நிலங்களை எடுக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு 

கடலூரில் சேத்தியாத்தோப்பு அருகே விளைநிலங்களை அழித்து கால்வாய் வெட்டும் பணியில் என்.எல்.சி. நிர்வாகம் ஈடுபட்டுள்ள நிலையில், சுமார் 35 ஜே.சி.பி. இயந்திரங்கள் மூலம் நிலங்கள் சமன்படுத்தும் பணி தொடங்கியுள்ளது.  மேலும், மேல் வளையமாதேவியில் நெற்பயிர்கள் நடவு செய்யப்பட்ட வயலில் கால்வாய் வெட்டும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

வளையமாதேவியில் இன்னும் இரண்டு மாதத்திற்குள் நெற்பயிர்கள் அறுவடை செய்ய இருக்கும் நிலையில் கால்வாய் வெட்டும் பணி தொடங்கியுள்ள மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விளைநிலங்களை சமன்படுத்தும் இடத்திற்குள் மக்கள் நுழையாத வண்ணம் சுமார் 400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே கடலூர் மாவட்டத்தில் என்.எல்.சி. நிலக்கரி சுரங்கம் விரிவாக்கத்திற்காக நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு, ஏக்கருக்கு 6 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்