தூத்துக்குடியில் பனிமய மாதா பேராலயத்தில் தங்கத் தேர் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்…!

தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயத்தில் 441-வது தங்கத் தேர் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்.
தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயத்தில் 441-வது தங்கத் தேர் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் ஆண்டகை ஆலய கொடியை ஏற்றிய நிலையில், ஆகஸ்ட் 5-ஆம் தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது.
கொடியேற்றத்தின் போது சமாதான புறாக்கள் பறக்க விடபட்டது. இந்த திருவிழாவுக்கு மத வேறுபாடின்றி அனைத்து மதத்தினரும் கலந்து கொண்டனர். தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய தங்கத்தேர் திருவிழாவை முன்னிட்டு திருநெல்வேலி சரக DIG திரு. பிரவேஷ் குமார் IPS அவர்கள் மற்றும் மாவட்ட SP டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் ஆகியோர் தலைமையில் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
இன்று இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…வெப்பநிலை இப்படிதான் இருக்கும்! வானிலை மையம் தகவல்!
April 5, 2025
‘தமிழ்நாட்டில் கால் வை பார்க்கிறேன்’..எச்சரித்த வைகோ…பதிலடி கொடுத்த நிர்மலா சீதாராமன்!
April 5, 2025