எங்கள் அணியும் இந்தியா அணி தான்.! விளையாட்டு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு.!

Tamilnadu chief minister MK Stalin

எங்கள் அணியும் இந்தியா அணி தான் என முதல்வர் கோப்பை இறுதி விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் முதலமைச்சர் கோப்பைக்கான நிறைவு விழா நடைப்பெற்றது. இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர். இவ்விழாவில், முதலமைச்சர் கோப்பையில் முதல் 3 இடங்களை பிடித்த சென்னை, செங்கல்பட்டு, கோவை மாவட்டங்களுக்கு முதல்வர் வெற்றி கோப்பைகளை வழங்கினார்.

இந்த விழாவில் முதலில் மு.க.ஸ்டாலின் பேசுகையில், விளையாட்டு வீரர்கள் மட்டுமல்ல நாங்களும் இந்தியாவின் வெற்றிக்காக போராடி வருகிறோம். எங்கள் அணியும் இந்தியா தான் என்று குறிப்பிட்டார். மேலும், எங்கள் அணியில் அனைவரும் ஒன்றிணைந்து இந்தியாவில் வெற்றிக்காக பாடுபட்டு வருகிறோம் என தங்களின் எதிர்க்கட்சிக் கூட்டணி பற்றி அவர்கள் மு.க.ஸ்டாலின் பேசினார்.

மேலும் பேசிய முதல்வர், செஸ் ஒலிம்பியாட் போட்டியின் போது நமது கலை நிகழ்ச்சிகள் மூலமாக தமிழ்நாட்டு மக்களின் விருந்தோம்பலை வெளிப்படுத்தினோம். தமிழகத்தின் விளையாட்டு துறை வளர்ச்சி பெருமையை தருகிறது. முதல்வர் கோப்பையை சிறப்பாக நடத்தி கொடுத்த அனைவருக்கும் நன்றி. முதல்வர் கோப்பைக்காக தமிழக அரசு 50.86 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது. இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்க மட்டும் 28.8 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஒட்டுமொத்தமாக 3.70 லட்சம் விளையாட்டு வீரர்கள் பங்கேற்றதை நாங்கள் பெருமையாக நினைக்கிறோம் என முதல்வர் குறிப்பிட்டார் .

விளையாட்டு போட்டிகளை நடத்துவது மட்டுமின்றி விளையாடுபவர்களும் பொறுப்புடன் விளையாட வேண்டும் என்று முதல்வர் கோப்பை இறுதி விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்