விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து – போர் மேன் கைது..!

விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 2 பேர் உயிரிழந்த நிலையில், போர் மேன் கைது.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், தாயில்பட்டி கிராமத்தில் இயங்கி வரும் தனியாருக்குச் சொந்தமான வெடிபொருள் தொழிற்சாலையில் இன்று பிற்பகல் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தீவிபத்தில் விஸ்வநத்தம் கிராமத்தைச் சேர்ந்த திருமதி.முருகேஸ்வரி (வயது 39) மற்றும் மண்குண்டாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த திருமதி.பானு (வயது 39) ஆகிய இருவரும் உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் தனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, அவர்களது குடும்பத்தினருக்கு தலா மூன்று இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், இந்த நிலையில் ஆலை உரிமையாளர் சண்முகையா, பங்குதாரர் மகேந்திரன் தலைமறைவான நிலையில், போர்மேன் கண்ணன் கைது செய்யப்பட்டுள்ளார்.