சிவகார்த்திகேயனின் வசூல் வேட்டை…ரூ.100 கோடியை எட்டும் மாவீரன்!
![Maaveeran](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2023/06/Maaveeran.png)
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் 14ம் தேதி வெளியான ‘மாவீரன்’ திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்தது வருகிறது. இப்படம் 11 நாளில் உலகம் முழுவதும் ரூ.75 கோடி வசூல் செய்துள்ளதாக மாவீரன் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
![Maaveeran 75 CRORES worldwide](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2023/07/Maaveeran-75-CRORES-worldwide-scaled.jpg)
இப்படம் வெளியான நாளில் இருந்தே, பாசிடிவ் விமர்சனங்களுடன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதுவரை, தமிழ்நாட்டில் ரூ.43.75 கோடியும், கர்நாடகாவில் ரூ.4.30 கோடியும், ஆந்திராவில், ரூ.4.55 கோடி, இந்தியாவின் மற்ற பகுதிகளில் ரூ.2.70 கோடி என மொத்தம் ரூ.75 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாம்.
![Maaveeran](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2023/07/Maaveeran.jpg)
படம் வெளியாகி இரண்டு வாரத்தில் ரூ.75 கோடி வசூல் செய்துள்ளதால், இந்த வார முடிவில், அநேகமாக ரூ.100 கோடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி, இந்த வார முடிவில் ரூ.100 கோடி வசூல் செய்தால், இது அவருக்கு மூன்றாவது 100 கோடி ரூபாய் வசூல் செய்த திரைப்படமாக மாறும்.
![](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2023/07/Maaveeran.png)
மாவீரன்:
இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கிய ‘மாவீரன்’ படத்தின் கதையை மடோன் அஷ்வின் மற்றும் சந்திரா இணைந்து எழுதியுள்ளனர். இப்படத்தில் சிவகார்த்திகேயன், அதிதி சங்கர் மற்றும் மிஷ்கின் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். யோகி பாபு, சுனில், சரிதா மற்றும் மோனிஷா பிளெஸ்ஸி ஆகியோர் துணை நடிகர்களாக உள்ளனர்.