தமன்னா விரலில் ரூ.2 கோடி மதிப்புள்ள உலகின் 5-வது வைர மோதிரம்! கொடுத்தது யார் தெரியுமா?
நடிகை தமன்னா உலகின் 5-வது பெரிய வைரத்தை வைத்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி அனைவரது கவனத்தையும் பெற்றுள்ளது.
இது குறித்து ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் இதன் மதிப்பு குறித்தும், உண்மையில் அந்த வைர மோதிரத்தை அவருக்கு யார் கொடுத்தது என்ற கேள்வியையும் எழுப்பி வருகின்றனர். பலருக்கு இது புதிய தகவலாக இருக்கலாம், ஆனால் இது 2019ல் நடந்த கதை.
அட ஆமாங்க…2019-ம் ஆண்டு “சைரா நரசிம்ம ரெட்ட” படத்தில் தமன்னா நடித்திருந்தார். இப்படத்தை சிரஞ்சீவி மருமகளும், ராம் சரணின் மனைவியுமான உபாசனா தயாரித்திருந்தார். இப்படம் அந்த அளவுக்கு பேசவில்லை என்றாலும், தமன்னாவின் கதாபாத்திரம் பேசப்பட்டது.
இதனால், தமன்னாவுக்கு ரூ.2 கோடி மதிப்புள்ள வைரத்தை உபாசனா தான் பரிசாக அளித்ததாக கூறப்படுகிறது. இவ்வளவு விலையுயர்ந்த பரிசை கொடுக்க தமன்னா தேர்வு செய்யப்பட்டதற்கு அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். மேலும், இது உலகின் ஐந்தாவது பெரிய வைரம் என தெரியவந்துள்ளது.
தமன்னாவுக்கு வைர மோதிரத்தை பரிசாக அளித்த செய்தியை உபாசனாவே தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ஆனால், திடீரென இந்த புகைப்படம் வைரலானதால், யார் இவருக்கு பரிசாக கொடுத்தனர் ஆச்சர்யத்துடன் பார்க்க தொடங்கினர்.
A gift for the super @tamannaahspeaks
from Mrs Producer ????❤️????
Missing u already. Catch up soon. #SyeraaNarashimaReddy pic.twitter.com/rmVmdwWNAd— Upasana Konidela (@upasanakonidela) October 3, 2019