வங்கக் கடலில் உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி!
வங்கக் கடலில் உருவாகியிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலு பெற்றுள்ளது.
மேற்கு மத்திய மற்றும் அதை ஒட்டிய வடமேற்கு வங்கக் கடலின் வடக்கு ஆந்திரா – தெற்கு ஒடிசாவில் நேற்று உருவாகிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளது. இது கொஞ்சம் கொஞ்சமாக வடமேற்கு திசை நோக்கி நகரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளது. இதன் காரணமாக இன்று முதல் ஜூலை 28ம் தேதி வரை ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா மாநிலங்களின் கடலோர பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும். குறிப்பாக, தெலங்கானா மாநிலத்தில் இன்றும் நாளையும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.