பயணிகள் அவதி… ஐஆர்சிடிசி இணையதளம் முடங்கியது.!
ஐஆர்சிடிசி இணையதளம் தொழில்நுட்பக்கோளாறு காரணமாக முடங்கியுள்ளது.
ரயிலில் பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்யும் ஐஆர்சிடிசி(IRCTC) இணையதளம் முடங்கியுள்ளது. இதனால் பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. தொழில்நுட்பக்கோளாறு காரணமாக ஐஆர்சிடிசி இணையதளம் முடங்கியுள்ளதாக IRCTC தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
Due to technical reasons the ticketing service is not available. Our technical team is resolving the issue. We will notify as soon as the technical issue is fixed.
— IRCTC (@IRCTCofficial) July 25, 2023
தொழில்நுட்பக்குழு இந்த பிரச்சனையை தீர்த்து வருவதாகவும், விரைவில் இதனை சரிசெய்துவிட்டு பயணிகளுக்கு தெரிவிக்கப்படும் என தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளது.