தமிழகத்தில் மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வு தொடங்கியது.!
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிகள் மற்றும் அரசு ஒதுக்கீட்டில் உள்ள சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் மொத்தம் 6326 எம்.பி.பி.எஸ். இடங்களும், அரசு பல் மருத்துவ கல்லூரிகள் மற்றும் அரசு ஒதுக்கீட்டில் உள்ள சுயநிதி பல் மருத்துவ கல்லூரிகளில் உள்ள மொத்த BDS இடங்கள் 1768 இடங்கள் உள்ளன.
இந்த இடங்களுக்கு ஆன்லைன் வாயிலாக கலந்தாய்வு இன்று (ஜூன் 25) முதல் துவங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில் , இன்று கலந்தாய்வு துவங்கியுள்ளது. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட மாணவர்களின் தரவரிசைப்படி இந்த கலந்தாய்வு துவங்கியுள்ளது.